புதுச்சேரி மாநிலத்தில் நேற்று செய்யப்பட்ட பரிசோதனையில் புதிதாக 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலமான புதுச்சேரியில் இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 126 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,967 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் 1,220 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், இதில் 21 பேர் காரைக்காலையும், 4 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் என்று சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.

