திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தேசிய கொடி பறக்கவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.இதன்பெயரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அமீர்கான் ஆகியோர் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை பறக்கவிட்டனர். பெரும்பாலான பொது மக்களும் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். மேலும், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் தனது வீட்டில் தேசிய கொடியை பறக்கவிட்டுள்ளார்.

