தொடர் விடுமுறையின் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அங்கு மக்கள் கடலில் குளித்து கோவிலில் உள்ள முருகனை வழிபாடு செல்கின்றனர். இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறையை முன்னிட்டு தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. குமரி, நெல்லை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே வருகை தந்த பக்தர்கள், கடலில் புனித நீராடிவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்ததின் காரணமாக கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகமான பேருந்துகளும் திருப்பிவிடப்பட்டுள்ளது.

