கொசஸ்தலை அணை பிரச்சனை குறித்து ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொசஸ்தலை அணை
கடிதத்தில், ‘ஆந்திர மாநிலத்தின் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்டுவதற்காக ஆந்திர மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ்வாறு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், தமிழக அரசினை கலந்தாலோசிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்’ என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

