15 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜயுடன் இணைந்து பணியாற்றுவதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
விஜயின் வாரிசு
பீஸ்ட் படத்தை அடுத்து வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ் சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.
பிரபல நடிகர்
இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ் ஒரு பேட்டியில் பேசும்போது ‘என் செல்லத்தோட 15 ஆண்டுகளுக்கு பிறகு சேர்ந்து பணியாற்றுகிறோம். இதன் மூலம் நானும் செல்லமும் திரும்ப சேர்ந்திருக்கிறோம்’ என்று பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

