மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் ரயில் மறியல் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் மறியல் போராட்டம்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்டது. இச்சம்பவம் அந்தப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதை கண்டித்து திமுகவினர் மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். மதுரை விமான நிலைய வளாகத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

