சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
வெந்து தணிந்தது காடு
இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இவர்களின் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘நீ வேணும்’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் வரும் 14-ம்தேதி மாலை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
The Soulful song u all have been waiting for ! #MarakkumaNenjam from @SilambarasanTR_ – @menongautham‘s #VendhuThanindhathuKaadu releasing On Aug 14th 6:21 PM! ❤️#VTKFromSep15
Lyrics By @Kavithamarai
An @arrahman Musical
#SilambarasanTR @IshariKGanesh @VelsFilmIntl pic.twitter.com/8AFD7xp5mh— Vels Film International (@VelsFilmIntl) August 11, 2022

