குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் தாமோதரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர்.
அமைச்சர்கள் சாமி தரிசனம்
தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் உள்ளது இந்த கோவில் தென் தமிழகத்தில் மிக பேரசித்திபெற்ற கோவிலாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு இன்று காலை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். அமைச்சர்களை கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன் மற்றும் திமுக கட்சியினர் வரவேற்றனர்.

