விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றுள்ளது.
விஜய் சேதுபதி படம்
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் மாமனிதன். இதில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைத்திருந்தனர். மேலும், ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்த இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்பிரபலங்கள் பலரும் மாமனிதன் படத்தை பாராட்டி வந்தனர். ஏற்கனவே டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான விருதை மாமனிதன் வென்றது.
இந்நிலையில், தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த சாதனை உள்ளிட்ட 3 விருதுகளை மாமனிதன் திரைப்படம் வென்றுள்ளது. இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Love to @YSRfilms @thisisysr
Thanks tohttps://t.co/GJetWW5tdP #Maamanithan had won
3 prestigious awards in Tagore International film festival Kolkata@ahatamil @ahavideoIN @ilaiyaraaja@VijaySethuOffl @studio9_suresh@SGayathrie @shajichen @ramjisoma7 @onlynikil @Riyaz_Ctc pic.twitter.com/rHpRacQRS6— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) August 9, 2022

