நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
நிலக்கரி ஊழல்
நிலக்கரிச் சுரங்கத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகை விடும் முறையில் மிக பெரிய ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் செயலாளர் மீது குற்றசாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துபட்டு சிபிஐ (CBI) விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் கடந்த வரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நாக்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் எச்.சி.குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதேபோல், ஒன்றிய நிலக்கரித்துறை இணை செயலாளர் கே.எஸ். குரோஃபாவுக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

