சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஆடித்தபசு தேரோட்டம்
தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண கோமதி அம்பாள் கோவிலும் ஒன்றாக உள்ளது. கோவிலில் கடந்த 31ம் தேதி ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். அதில் ஒவ்வொரு நாலும் நாராயணர், அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோவிலில் தேரோட்டம் 9ம் திருநாளான இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. இதில் தேருக்கு பாத்தியப்பட்ட மக்கள் தேருக்கு பூஜை செய்தி தேரை முதலில் தட்டிப்போட்டு வட்டம் பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து இந்த தேரோட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

