10 ஆண்டுகால திருமண வாழ்க்கையை தேனிலவு சுற்றலா பயணமாக உலக நாடுகளை சுற்றி வரும் தம்பத்தினர்.
தேனிலவு வாழ்க்கை
அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியை சேர்ந்த மைக் ஹாவர்ட் மனைவி ஆன். ஆனை நியூ ஜெர்சியில் நடந்த கைப்பந்து போட்டியின்போது மைக் ஹாவர்ட் சந்தித்துள்ளார். இருவரும் காதல் வசப்பட கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்குமே உலக நாடுகளை சுற்றி பார்ப்பதில் விருப்பமுள்ளவர்கள். இந்த தம்பதியர் தேனிலவு கொண்டாட்டத்துக்கென இந்த சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளனர். அதனை தொடர்ந்தது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் என கடந்த 10 ஆண்டுகளாக 64 நாடுகளுக்கு சென்று இந்த ஜோடி தேனிலவு கொண்டாடியுள்ளனர். இப்போது, இந்தியா உள்ள கேரளாவின் சுற்றுலா தலங்கள் பற்றி கேள்விப்பட்டு வந்ததாக கூறியுள்ளனர். தேனிலவு இன்பமாக உள்ளது எனவும் இதற்காக நாங்கள் எதையும் திட்டமிடுவதில்லை. மேலும், நாங்கள் செல்லும் நாடுகளுக்கு ஏற்ப அங்குள்ள சூழ்நிலைகளை கொண்டு பயணத்தை திட்டமிடுகிறோம் எனவும் கூறினர்.

