சிவகங்கை கச்சநத்தத்தில் நடந்த படுகொலை வழக்கில் 27 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கச்சநத்தம் படுகொலை
சிவகங்கை, திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பான இரு சமூகம் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதில்பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகிய 3 பேரும், கடந்த 2018ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்ததில் ஒருவர் மட்டும் இறந்துள்ளார். இந்த வழக்கில் கச்சநத்தம் அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களான சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் மீதமுள்ள 27 நபர்கள் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 27 நபர்களுக்கும் குற்றவாளிகள் என கடந்த 1ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்நிலையில், கச்சநத்தம் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 27 நபருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதையடுத்து, குற்றவாளிகள் 27 நபரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

