கேட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை என்.எல்.சியில் பணியமர்த்துவது சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என திமுக எம்.பி, டி.ஆர். பாலு குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
டி.ஆர். பாலு பேச்சு
இது குறித்து மக்களவையில் பேசிய திமுக எம்பி டி.ஆர். பாலு, கடந்த 39 ஆண்டுகளாக முதுநிலை படிப்புகளில் சேரும் பட்டதாரிகளுக்காக கேட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், கேட் தேர்வில் வெற்றி பெற்ற 299 பேர் என்எல்சியில் பணியமர்த்தப்பட்டுள்ளது. இது இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி கொள்கைகளுக்கு எதிரானது என குற்றம்சாடினார். மேலும், கேட் தேர்வில் வெற்றி பெற்ற இளநிலை பட்டாதாரிகளை என்எல்சியில் பணியமர்த்தியுள்ளது அநீதியின் உச்சம் என குற்றம்சாட்டிய டி.ஆர்.பாலு, என்எல்சியில் 299 பேர் பணியமர்த்தப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இவ்விவகாரம் தொடர்பாக நெய்வேலி சிஎம்டி அதிகாரியை நேரில் வருமாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைத்துள்ளார். வருகிற 4ம் தேதி இவ்விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும், அதில் தமிழக அரசு தரப்பில் பங்கேற்போம் என தெரிவித்தார்.

