நேற்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கள் தற்போது 5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
முதல் சிங்கள்
கல்கி எழுதிய வரலாற்று கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் பிரம்மாண்ட பொருட்ச்செலவில் தயாரித்துள்ளது. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பெயரில் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. ஏ.ஆர்.ரகுமான் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் வெளியான ஒரே நாளில் யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

