தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்காவது பாடல்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம். நித்யா மேனன்,ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்படுள்ளது.
அனிருத் ரவிச்சந்தர் இசையில் ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த படத்தின் தேன்மொழி என்ற பாடல் என்ற பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
My favourite ♥️♥️ https://t.co/0fJok42j6Y
— Dhanush (@dhanushkraja) July 29, 2022

