நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோ 75 ரூபாய் அதிகரித்துள்ளது.
கறிக்கோழி விலை அதிகரிப்பு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ 73 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் கறிக்கோழி விலை கிலோ 75 ரூபாயாக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ 95 ரூபாயாகவும் அதே விலையில் நீடிக்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை கூறப்பட்டுள்ளது. கறிக்கோழி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் பண்ணை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

