‘எனது சிம் கார்ட் பாஜகவினரை தொடர்புகொண்ட பிறகு தான் முடக்கப்பட்டு உள்ளது’ என குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மார்கரட் அல்வா குற்றம்சாட்டியுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
வெங்கய்யா நாயுடுவின் குடியரசு துணைத் தலைவருக்கான பதவிகாலம் முடிவடைய உள்ளதால், குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்டு 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 6ம் தேதி தொடங்கிய ஜூலை 19ம் தேதி நிறைவடைந்தது.

பாஜக வேட்பாளர்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்படார். ஜெகதீப் தங்கர் வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர் ஜெய்ஷங்கர், ம நரேந்திர சிங் தோமர் ஆகியோர் உடன் இருந்தனர்.

காங்கிரஸ் வேட்பாளர்
காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கலின் கடைசி நாளன்று மார்கரட் அல்வா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது இவர் உடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக எம்.பி. திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இருந்தனர்.

மார்கரட் அல்வா ட்வீட்
தற்போது இரு தரப்பினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்கரெட் ஆல்வா பாஜகவினரை குற்றம் சாட்டி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
Dear BSNL/ MTNL,
After speaking to some friends in the BJP today, all calls to my mobile are being diverted & I’m unable to make or receive calls. If you restore the phone. I promise not to call any MP from the BJP, TMC or BJD tonight.
❤️
Margaret
Ps. You need my KYC now? pic.twitter.com/Ps9VxlGNnh
— Margaret Alva (@alva_margaret) July 25, 2022
அந்த ட்வீட்டில், ‘பாஜகவை சேர்ந்த சில நண்பர்களுடன் பேசிய பிறகு தான் எனது செல்போனுக்கு வரும் அழைப்புகள் டைவர்ட் செய்யப்படுகின்றன. என்னால் எந்த அழைப்பையும் செய்ய முடியவில்லை. எனக்கு எந்த அழைப்பும் வருவதும் இல்லை’ என ட்விட்டரில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும், ‘இனி பாஜக, பிஜு ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் தொடர்புகொள்ள மாட்டேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

