மகாராஷ்டிராவில் பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியதில் இளம் பெண் விமானி படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
விமானம் விபத்து
மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் கத்பன்வாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலம் ஒன்றில் பயிற்சி விமானம் ஒன்று திடீரென இன்று காலை விழுந்து விபத்திற்குள்ளானது. விமானத்தில் இருந்த 22 வயதுடைய இளம் பெண் விமானி பவிகா ரத்தோட் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். விமானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட பவிகா உடனடியாக செல்காவன் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அவசரகால பணியாளர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

