மின் கட்டண உயர்வு குறித்து மின் நுகர்வோர் தங்களது கருத்தை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
மின் கட்டண உயர்வு
தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதித் சுமையில் இருப்பதால் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். அதன்படி 2 மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 27.50 ரூபாயும், 300 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 72.50 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவகாசம்
ஏற்கனவே நடைமுறையில் உள்ள 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மாற்றம் ஏதுமின்றி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் முறையும் தொடரும் என்று தெரிவிக்கப்பத்துள்ளது. இது குறித்து மின் நுகர்வோர் தங்களது கருத்தை தெரிவிக்க ஆகஸ்ட் 22ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

