வீட்டு பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசாவும், வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 2.72 வரையிலும் உயர்கிறது.
மின்கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அந்தவகையில் வீட்டின் பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசாவும் வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 2.72 பைசா வரையிலும் உயர்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் 200 யூனிட் மின்சாரத்தை 63.35 லட்சம் வீடுகளிலும், 300 யூனிட்டுகள் மின் நுகர்வை 36.25 வீடுகளிலும், 400 யூனிட்கள் மின்நுகர்வை 18.82 லட்சம் வீடுகளிலும், 500 யூனிட்கள் மின்நுகர்வை 10.56 லட்சம் வீடுகளிலும் 600 யூனிட்களுக்கு மேற்பட்ட மின்நுகர்வு 3.14 லட்சம் வீடுகளில் பயன்படுத்துகின்றனர்.
புதிய விலை மாற்றம் : அதன்படி இரண்டு மாதத்துக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு ரூ.27.50, 300 யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கு ரூ.72.50, 500 யூனிட் வரை பயன்படுத்தும் நபர்களுக்கு ரூ.297.50, 600 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு ரூ.155 உயர்த்தப்பட உள்ளது.
மின்கட்டணம்: வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரங்களில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு 1,130 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. மின்நுகர்வு 501 யூனிட் ஆக அதிகரிக்கும்பட்சத்தில் மின்கட்டணம் 58.10 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 1,786 ரூபாய் ஆக வசூலிக்கப்படுகிறது.
இதனை நீக்கி ஒரே மின்கட்டணமாக வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சிறு குறு தொழில்க்கான மின்நுகர்வோருக்கு யூனிட்டுக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக வளாக மின்நுகர்வோர்களுக்கு மாதம் ரூ.50 மட்டுமே மின்கட்டணம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

