‘தமிழ்நாடு இனி எப்போதும் திமுக கோட்டைதான்’ என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டி.ஆர்.பாலு அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். ‘கட்சியின் அதிகாரத்திற்கான அதிமுகவின் தெருச்சண்டையை மறைக்க, திமுக மீது குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறிவருகிறார். தன்னுடைய சொந்த மாவட்டத்தில் வென்றதுபோல மற்ற மாவட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தால் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்திருக்கும் என்று பேசியிருக்கிறார். கடந்த ஆண்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் அதிமுக மண்ணை கவ்வி இருக்கிறது.
மக்களின் பேராதரவுடன் சேலம் மாவட்டம் திமுக கோட்டையாகத் திகழ்வதையும் மறந்துவிட வேண்டாம். எடப்பாடி நகராட்சி உள்பட பெரும்பான்மையான இடங்களில் திமுகவும் தோழமைக் கட்சிகளும் அமோக வெற்றி பெற்றிருப்பதைப் எடப்பாடி பழனிசாமியால் மறக்க முடியாது. சேலம் மட்டுமல்ல, தமிழ்நாடே இப்போதும், இனி எப்போதும் திமுக கோட்டைதான் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

