காங்கிரஸ் கட்சியின் தலைமை, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் டெல்லியில் நடைபெறுகிறது.
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தன் சிவிர்’ கூட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய முழுவதும் மாபெரும் பேரணி நடத்த காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளது. வேர்வை சிந்தாமல் பொதுமக்களை நேரடியாக சந்திக்க முடியாது என தெரிவித்த தலைமை இப்பேரணியில் கட்சியின் அனைத்து தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைமை, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில் பேரணி மட்டுமின்றி தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

