தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அறிக்கை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் அதிகபட்சமாக, 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே மாவட்டம் மேல் பவானியில் 10.செ.மீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை ஆகிய இடங்களில் தலா, 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 55 முதல் 65 கி.மீ, வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தது அறிக்கை வெளியிட்டுள்ளது.

