அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபின் முதன்முறையாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறயுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் சர்ச்சையை கிளப்பியுள்ள வேளையில், சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த 11ம் தேதி அன்று அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக. எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபின் முதன்முறையாக அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி வசிக்கும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல், எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரமும் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

