அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதாக சர்ச்சை ஆடியோ ஒன்றை ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இந்நிலையில், அந்த ஆடியோ தொடர்பாக பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் நேற்று இரவு அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசிய தொலைபேசி சர்ச்சை ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்றும் மேலும், இபிஎஸ்க்கு வெறும் 9 எம்.எல்.ஏ. க்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் பொன்னையன்பேசுவது போன்று இருந்தது.
இதனிடையே அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் அந்த ஆடியோ தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘எடப்பாடி பழனிசாமி குறித்து நான் பேசியதாக வெளியான ஆடியோ உண்மை இல்லை’ என்று பொன்னையன் கூறியுள்ளார்.

