அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பெண் ஒருவரை தாக்குவது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை கண்டனம்
அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதில், மக்கள் என்ன உங்கள் அடிமைகளா ? விருதுநகர், பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது தமிழக பாஜக அவரது வீட்டை முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?
விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்
அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை @BJP4TamilNadu முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்! pic.twitter.com/iV4fyKLnXQ
— K.Annamalai (@annamalai_k) July 12, 2022

