புதுச்சேரி அருகே நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் அவருக்கு 18 அடியில் பிரம்மாண்ட சிலை அமைத்து அதற்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார்.
புதுச்சேரி மாவட்டம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தீவிரமான நித்தியானந்தாவின் சீடர் என்று கூறப்படுகிறது. பாலசுப்பிரமணியம் அந்த பகுதியில் 27 அடி பிரமாண்ட முருகன் சிலை கொண்ட ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என்ற கோயிலை கட்டியுள்ளார். அந்த கோயிலின் நுழைவாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அந்த சிலையில் நித்தியானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் காட்சியளிக்கிறார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

