அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி தலைவர் நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு ஆன பிறகு ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடங்களில் வந்த எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அவருடன் ஆதரவாளர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.

