பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைத்தனர்.
கதவுகள் உடைப்பு
சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வானகரம் நோக்கி பயணித்தார். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் நிலவி வருகிறது. மோதலின் போது, பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைத்தனர். கதவை அடித்து உடைத்த ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகம் உள்ளே நுழைந்தனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஈபிஎஸ் பேனர்களை கிழிக்கப்பட்டது.

