ராமநாதபுரத்தில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அதிமுக ஆலோசனை கூட்டம்
தமிழக அரசியலில் அதிமுகவில் நடந்து வரும் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அதிமுக நகர கழகம் சார்பில் ஒற்றை தலைமை குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்த்தில் திடீரென ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் அங்கிருந்த இருக்கைகளை கொண்டு அடித்தும் ,ஒலி பெருக்கியை மேல் வீசி அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு, முக்கிய நிர்வாகிகள் உட்பட்ட 5 பேர் படுகாயமடைந்தனர் .
ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினரிடையே மோதல்!#ADMK | @AIADMKOfficial | @OfficeOfOPS | @EPSTamilNadu | @iamradioguru | #pesutamizhapesu | #பேசுதமிழாபேசு pic.twitter.com/bNYtzVBl9j
— Pesu Tamizha Pesu (@pesutamizhapesu) July 8, 2022

