தமிழநாட்டில் ஒரு ஷிண்டே புறப்படுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழகத்தில் ஒரு ஷிண்டே
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘உதயநிதிக்கு அமைச்சர் பதவி காத்திருப்பதை போல இங்கே ஒரு ஷிண்டே புறப்படுவார். 2024-ல் தமிழகத்தில் நிச்சயம் 25 எம்.பி.க்களை பாஜக உருவாக்கும். 25 எம்.பிக்களை நாம் உருவாக்கினால் தான் 180 சட்டமன்ற உறுப்பினர் பெற்று 2026ல் தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும்.
டிசம்பர் 31ம் தேதிக்குள் 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றால் ஜனவரி 1ம் தேதி பாதயாத்திரை துவங்கி டிசம்பர் 31ம் தேதி கோபாலபுரம் பகுதியில் பாதயாத்திரை முடிவடையும். ஒரு வருடம் குடும்பம் சம்பாத்தியம் அனைத்தையும் விட்டுவிட்டு பாதயாத்திரையில் பா.ஜ.க தொண்டர்கள் தயராக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து மாதம் அதற்காக தயாராகுங்கள்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

