நாமக்கலில் கல்லூரி பேருந்து மோதி 5ம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார்.
மாணவன் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள செம்மண்காடு கிராமம் உள்ளது. அந்த பகுதியில் பள்ளி பேருந்துக்காக நிழல் கூடத்தில் காத்திருந்த 5ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி பேருந்துக்காக காத்திருந்த மாணவன் மீது கல்லூரி பேருந்து மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

