ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தில் நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பேராத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குளிக்கச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா ? என ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

