சினிமாவெள்ளித்திரை

கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் விஷால் படம்!

ரிலீஸ் தேதி

‘வீரமே வாகை சூடும்’ படத்தை அடுத்து நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லத்தி’. இப்படத்தை இயக்குனர் வினோத் குமார் இயக்க, நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தை ‘ராணா புரொடக்ஷன்’ தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஊஞ்சல் மனம் ஆடுமே’ சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘லத்தி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related posts