பாராட்டு
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மாமனிதன். இதில் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ஏற்கனவே டோக்கியோ திரைப்பட விழாவில் சிறந்த ஆசியப்படத்திற்கான விருதையும், பூடான் நாட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகளையும் பெற்றது.
இந்நிலையில், மாமனிதன் திரைப்படத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இயக்குனர் சீனுராமசாமியுடன் இணைந்து பார்த்துள்ளார். மேலும், இது குறித்து எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..! இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். https://t.co/gx50UAi6Ci
— Dr.L.Murugan (@Murugan_MoS) November 18, 2022