சினிமாவெள்ளித்திரை

பிரபல இயக்குனருடன் இணையும் பி.சி.ஸ்ரீராம்!

பிரபல இயக்குனர்

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து நடிகர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவுள்ளார். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார். அதில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பணியாற்ற உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts