தமிழ்நாடுபயணம்

நாளை கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கம்!

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

கூடுதல் பேருந்துகள் 

இதனால் அந்த நேரங்களில் மக்கள் பயணிக்க சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். அதன்படி 21,22 23 ஆகிய தேதிகளில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பேருந்துகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டது. இதனால் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 250 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts