Editor's Picksஃபிட்னஸ்உலகம்சினிமாவெள்ளித்திரை

கிராமிஸ் 2022 வென்றவர்கள் கூட இவ்வளவு ட்ரெண்ட் ஆகவில்லை! இணையத்தைக் கலக்கும் BTS:

K-pop இசைக்குழுவான BTS இந்த வருடம் கிராமி விருதை பெறவில்லை, இருப்பினும் அவர்கள் விருது விழாவில் பட்டர் பாடலுக்கு ஆடிய கலக்கலான நடனத்தால் ரசிகர் பட்டாளத்தின் இதயங்களை வென்றனர்.

BTS குழு கிராமி 2022 இல் அவர்களின் ‘மிருதுவான வெண்ணெய் போன்ற'( ஸ்மூத் அஸ் பட்டர்) என்னும் இசை நடன நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை உற்சாகத்துக்கு உள்ளாகினர். K-pop பாய்ஸ் இசைக்குழு தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சிறந்த பாப் இரட்டையர்/குழு நிகழ்ச்சிக்காக பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

விருது அறிவிப்புக்கு முன், BTS அவர்களின் வெற்றி பாடலான ஸ்மூத் அஸ் பட்டர் பாடலுக்கு அற்புதமான நடன நிகழ்ச்சியுடன் மேடைக்கு வந்தனர். BTS இன் இளைய உறுப்பினரான Jungkook ஒரு கிரேனின் மேல் அமர்ந்து மேடைக்கு வந்தவுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

சிறந்த பாப் இரட்டையர்/குழு நிகழ்ச்சிக்கான கிராமி விருது டோஜா கேட் மற்றும் SZA அவர்களின் கிஸ் மீ மோர் பாடலுக்காக வழங்கப்பட்டது. இருப்பினும், BTS ஆர்மிக்கள் அவர்களுக்கு எழுப்பிய ஆரவாரம் பல விருதுகளை காட்டிலும் அவர்களுக்கு சிறந்த அங்கீகாரத்தை தந்தன.

Related posts