Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அறிவியல்»ரேடியோவை கண்டுபிடித்தது யார்? மார்கோனியா டெஸ்லாவா ?

ரேடியோவை கண்டுபிடித்தது யார்? மார்கோனியா டெஸ்லாவா ?

May 10, 20222 Mins Read402 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

உலகம் முழுமைக்கும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திட விஞ்ஞானிகள் அயராது முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒரே விதமான ஆய்வுகள் உலகில் வெவ்வேறு இடங்களில் நடப்பதும் உண்டு. ஒரே நேரத்தில் இரண்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பை நிகழ்த்திவிடுவதும் உண்டு.

அது போன்ற நேரங்களில் யாரோ ஒருவருக்கு கிடைத்துவிடும் காப்புரிமை அவரை வரலாற்றில் நிலைத்து நிற்கச் செய்துவிடுகிறது. அதுபோன்றதொரு குழப்பமான நிலை தான் ரேடியோ கண்டுபிடிப்பிலும் நடந்தது.

நிக்கோலா டெஸ்லா அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு ‘எடிசன்’ அவர்களின் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக வந்தார்.பின்னர் தனியே நிறுவனம் ஒன்றை தொடங்கினார் டெஸ்லா. டெஸ்லா கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு Tesla coil என்ற ஒன்றினை கண்டறிந்தார்.

இதன் மூலமாக அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரத்தை உருவாக்க முடியும். இதனைக்கொண்டு ரேடியோ அலைகளை குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அனுப்பவும் பெறவும் முடியும்.

டெஸ்லா முதன் முதலாக ரேடியோ சிக்னலை அனுப்ப தயாராக ஆனபோது தான் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.

1895 இல் ஏற்பட்ட அந்த விபத்தில் பல ஆண்டுகால உழைப்பும் சாதனங்களும் வீணாய் போனது. அதன் பிறகு டெஸ்லா ரேடியோ விற்கு காப்புரிமை பெற விண்ணப்பிக்கவில்லை.

மார்கோனி

இதே காலகட்டத்தில், இத்தாலி நாட்டை சேர்ந்த இளம் இயற்பியலாளர் இங்கிலாந்து நாட்டில் ரேடியோ கண்டுபிடிப்பில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தார். 1896 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் 6 கிலோமீட்டர் தொலைவுக்கு இடையே மோர்ஸ் குறியீடு அடிப்படையிலான ரேடியோ அலைகளை அனுப்பவும் பெறவும் செய்து சோதித்துக்காண்பித்தார்.

இதையும் படிக்க :  ஜனாதிபதி தேர்தல் : யஷ்வந்த் சின்காவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு !

அந்த ஆண்டே இங்கிலாந்து நாட்டின் காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்து காப்புரிமையும் பெற்றார். அதுதான் உலக அளவில் இணைப்பில்லாத தந்தி [wireless telegraphy] கண்டுபிடிப்புக்காக ஒருவர் காப்புரிமை பெற்றது.

டெஸ்லா தனது கண்டுபிடிப்பிற்காக 1897 ஆம் ஆண்டு அமெரிக்காவில் காப்புரிமை பெற்றார். அவர் 1898 இல் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ரேடியோ கட்டுப்பாட்டுடன் கூடிய படகு ஒன்றையும் கட்டி நிரூபித்தார்.

1900 ஆம் ஆண்டு அமெரிக்க காப்புரிமை நிறுவனம் 645,576 மற்றும் 649,621 என்ற இரண்டு காப்புரிமைகளை டெஸ்லா காயில் [Tesla coils] க்காக வழங்கியது.

இதனால் டெஸ்லாவிற்கு ரேடியோ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளுக்கான காப்புரிமை கிடைத்தது. அதே ஆண்டில் மார்க்கோனி அமெரிக்காவில் மேம்படுத்தப்பட்ட தந்திக்காக [tuned telegraphy] காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.

காப்புரிமை அலுவலகம் மார்க்கோனி அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தது. டெஸ்லாவின் அடிப்படை கண்டுபிடிப்பை அது ஒத்திருப்பதாக கூறியது காப்புரிமை நிறுவனம். மார்க்கோனி இதற்காக கவலைப்படவில்லை.

தனது தந்தையின் செல்வாக்கு மற்றும் தனது திறமை இவற்றை பயன்படுத்தி தன்னுடைய இணைப்பில்லாத தந்தி தொழில்நுட்பத்தை வியாபாரமாக்கினார்.

இதையும் படிக்க :  செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றம் சாத்தியமா ?

மீண்டும் மார்க்கோனி தனது கண்டுபிடிப்புக்காக காப்புரிமை கோரி அமெரிக்காவில் 1904 ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். இந்தமுறை அவருக்கு பெரும் முதலீட்டாளர்களான Andrew Carnegie மற்றும் Thomas Edison ஆகிய இருவரின் ஆதரவையும் பெற்றிருந்தார்.

கடந்த பல முறை காப்புரிமைக்கான விண்ணப்பத்தை நிராகரித்த காப்புரிமை நிறுவனம் இந்த முறை அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் மார்க்கோனிக்கு காப்புரிமை வழங்கியது.

நோபல் பரிசுக்கு எதிராக வழக்கு

1909 ஆம் ஆண்டு மார்க்கோனிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1915 ஆம் ஆண்டு காப்புரிமையை மீறியதற்காக மார்கோனியின் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் டெஸ்லா. கிட்டத்தட்ட டெஸ்லா இறப்பதற்கு முன்பு வரைக்கும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே, முதலாம் உலகப்போரில் தன் அனுமதியின்றி தான் காப்புரிமை பெற்ற ரேடியோ தொழில்நுட்பத்தை அமெரிக்கா பயன்படுத்தியது தவறு என்று கூறி மார்க்கோனி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மார்கோனிக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு பதிலாக டெஸ்லாவிற்கு ஏற்கனவே வழங்கிய காப்புரிமையே சரி என்று தீர்ப்பு வந்தது . அதாவது ரேடியோவை கண்டுபிடித்தது டெஸ்லா தான் என்று அதன் மூலமாக கூறியது. இதனால் மார்க்கோனியால் தொடரப்பட்ட வழக்கு ரத்தானது.

ஆனாலும், மார்க்கோனி தான் ரேடியோவை கண்டுபிடித்தவர் என்பது உலக மக்களிடையே நிலைத்துப்போனது.

marconi Nikola Tesla Nobel Prize radio signals science Technology
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஒத்துழையாமை இயக்கத்தில் பிறந்த ஒப்பற்ற நிறுவனம்- ஏசியன் பெயிண்ட்ஸ் – ஒரு சிறு பார்வை
Next Article சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் – ஒரு சிறு பார்வை

Related Posts

Editor's Picks

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக்கூடாது – நயினார் நாகேந்திரன்

November 27, 2025
Editor's Picks

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5ம் தலைமுறை போர் விமானம்

November 24, 2025
Editor's Picks

பிரமோஸ் வெறும் ஏவுகணை அல்ல இந்தியாவின் பாதுகாப்பு நம்பிக்கையாகும்

October 23, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,260 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,923 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,920 Views
Our Picks

எம்.என்.ராஜம், எஸ்.பி முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது

February 7, 2026

நாதக வேட்பாளர்களுடன் சீமான் இன்று ஆலோசனை

February 7, 2026

பிப்ரவரி 17-ல் இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

February 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.