Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, September 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»போர் நீடிப்பு: துபாய், குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

போர் நீடிப்பு: துபாய், குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

March 16, 20263 Mins Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்​தாரை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்​தது. ஈரானின் பார்சு மாகாண தலைநகர் சிராசு​வில் அந்த நாட்​டின் ராணுவ தளம் உள்​ளது. அங்கு ஏவு​கணை​கள் சேமித்து வைக்கப்பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இதைத் தொடர்ந்து சிராசு​வில் உள்ள ராணுவ முகாம்​களை குறி​வைத்து அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று தாக்​குதல் நடத்தின.

இதில் ஈரான் ராணுவ தளங்​கள் கடுமை​யாக சேதமடைந்​தன. இதே​போல ஈரானின் இஸ்​ப​கானில் உள்ள ராணுவ முகாம்​களை குறி​வைத்​தும் அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் வான் வழி தாக்​குதலை நடத்​தின. ஈரான் முழு​வதும் இது​வரை 1,400-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். ஆயிரக்​கணக்​கானோர் காயமடைந்து உள்​ளனர். அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு பதிலடி​யாக மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது.

ஐக்​கிய அரபு அமீரக தலைநகர் அபு​தாபி, துபாய் பகு​தி​களில் அமெரிக்க விமானப் படைத் தளங்​கள் செயல்​படு​கின்​றன. இந்த தளங்​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. மேலும் துபாய் மெரினா கடற்​கரை, அல் சூபவ் பகுதிகளில் ஈரான் ஏவு​கணை​கள் விழுந்து வெடித்​துச் சிதறின.

இதையும் படிக்க :  இலங்கை கடற்பகுதியில் ரூ.10 கோடி தங்கம் பறிமுதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் புஜா​யிரா துறை​முகத்​தின் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்​தினம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்தியது. இந்த தாக்​குதலால் துறை​முகத்தை ஒட்​டி​யுள்ள எண்ணெய் கிடங்​கு​கள் தீப்​பிடித்து எரி​கின்​றன. அங்கு 2-வது நாளாக நேற்​றும் எண்​ணெய் கிடங்​கு​கள் கொழுந்​து​விட்டு எரிந்தன. தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இதுதொடர்​பாக ஐக்​கிய அரபு அமீரக வட்​டாரங்​கள் கூறும்​போது, “எங்​கள் நாட்டை குறி​வைத்து ஈரான் ராணுவம் இது​வரை 1,800 ஏவு​கணை​களை வீசி​யிருக்​கிறது. 1,600 ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யிருக்​கிறது. பெரும்​பாலான ஏவு​கணை​கள், ட்ரோன்​களை நடு​வானில் இடைமறித்து அழித்​து​விட்​டோம்’’ என்று தெரி​வித்​தன.

குவைத்​தில் அமெரிக்க விமானப் படைத் தளம் செயல்​படு​கிறது. அந்த படைத்​தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று 2 ஏவுகணை​களை வீசி​யது. மேலும் குவைத் சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் விமான நிலை​யத்​தின் ரேடார் கட்​டமைப்பு சேதமடைந்​தது. சவுதி அரேபி​யா​வின் அல் கார்ஜ் நகரில் அமெரிக்க விமானப் படைத்தளம் செயல்​படு​கிறது. அந்த தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று 6 ஏவு​கணை​களை வீசி​யது. மேலும் 2 ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்த முயற்சி செய்​தது. ஈரானின் ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் நடு​வானில் அழிக்கப்​பட்​டன.

கத்​தார் தலைநகர் தோஹா​வில் உள்ள அமெரிக்க விமானப் படைத்​தளம், பஹ்ரைன் நாட்​டின் ஷேக் இசா​வில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம், அந்த நாட்​டின் மனா​மா​வில் உள்ள அமெரிக்க கடற்​படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. அவை நடு​வானில் அழிக்​கப்​பட்​டன. இஸ்​ரேலின் டெல் அவிவ் உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களை குறி​வைத்​தும் ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யது.

இதையும் படிக்க :  இலங்கை : இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமனம் !

இது தொடர்​பாக ஈரான் ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “இஸ்ரேலின் செயற்​கைக்​ கோள் கட்​டுப்​பாட்டு மையங்​கள், காவல் தலைமை அலு​வலங்​கள் மீது ஏவு​கணை, ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது” என்று தெரி​வித்​தன. இஸ்​ரேல் சுகா​தா​ரத்துறை நேற்று கூறும்​போது, “ஈரான் தாக்​குதலால் கடந்த 24 மணி நேரத்​தில் 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​துள்​ளனர். ஒட்​டுமொத்​த​மாக 3,195 பேர்​ மருத்​து​வ​மனை​களில்​ சிகிச்​சை பெறுகின்​றனர்​” என்​று தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

தாக்குதலில் தப்பிய இந்திய கப்பல்: ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜாயிரா துறைமுகத்தின் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அப்போது அந்த துறைமுகத்தில் இந்திய சரக்கு கப்பலான ஜக் லட்கியில் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டு கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக இந்திய சரக்கு கப்பலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த கப்பல் புஜாயிரா துறைமுகத்தில் இருந்து பாதுகாப்பாக புறப்பட்டது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபைக் டாக்சியில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த பெண் விபத்தில் சிக்கி பலி – சென்னையில் சோகம்
Next Article சென்னையின் முக்கிய பகுதியில் என்கவுன்டர்…. பிரபல ரவுடி சுட்டுக்கொலை!

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,171 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.