சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே கொள்ளை வழக்கில் தேடப்பட்ட தொப்பை கணேசன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த தொப்பை கணேசன் என்பவர் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 30ம் தேதி இதே மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரூ. 25 லட்சம் ரொக்கம் மற்றும் 15 பவுன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் தொப்பை கணேசன் தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இது தவிர, கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தொப்பை கணேசனை இன்று அதிகாலை மாதவரம் ரவுண்டானா அருகே காவல்துறை பிடித்துள்ளது. அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு தொப்பை கணேசன் தப்பிச் செல்ல முயன்றதாகவும், இதனால் நடந்த என்கவுன்டர் செய்யப்பட்டு அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்றும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தொப்பை கணேசன் உடல் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

