அரசியல்தமிழ்நாடு

ரசிகர்களை எச்சரிக்கும் விஜய்.. அரசியல் நாகரிகம் அவசியமென அறிக்கை!

விஜய் மக்கள் இயக்கம், நடைப்பெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் மக்களின் ஆதரவோடு அமோக வெற்றியடைந்தனர். மேலும் நகராட்சி தேர்தல்களிலும் ஆங்காங்கே வெற்றிகளைக் குவித்தனர்.

Image

அரசியல் கட்சி தலைவர்களையும், அரசு பதவிகளில் உள்ளோர்களையும் எதற்காகவும் இழிவுபடுத்தும் வகையில் இயக்கத்தினர் செயல்படக்கூடாது என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மேல்கூறிய செயல்பாடுகளில் யாரேனும் ஈடுப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Related posts