Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»“நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு..” – விவாகரத்து மனுவில் சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டு

“நடிகையுடன் விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு..” – விவாகரத்து மனுவில் சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டு

February 28, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 27 வருட மணவாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். சங்கீதா ஒரு லண்டன் வாழ் தமிழ் பெண்மணி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, பின்னாளில் அவருடைய வாழ்க்கைத்துணையாக மாறியவர். இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை ஒரு சினிமா கதை போலவே சுவாரசியமானது.

சங்கீதா லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய தந்தை சொர்ணலிங்கம் லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர். 1996-ம் ஆண்டு ‘பூவே உனக்காக’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நேரம். அப்போது விஜய்யைப் பாராட்டுவதற்காக லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார் சங்கீதா. படப்பிடிப்பு தளத்தில் விஜய்யைச் சந்தித்த சங்கீதா, தன்னை ஒரு ரசிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

சங்கீதாவின் குணாதிசயங்கள் விஜய்யின் பெற்றோருக்குப் பிடித்துப் போகவே, இருவீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட் 25, 1999 அன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் சஞ்சய், கனடாவில் திரைப்படத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பெண் குழந்தையான திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார்.

இதையும் படிக்க :  விஜய் சேதுபதி நிலையை எட்டுவது என்னால் முடியாது - ஹிருத்திக் ரோஷன்!

விஜய் ஒரு சூப்பர் ஸ்டாராக வளர்ந்ததில் சங்கீதாவிற்கு முக்கிய பங்கு உண்டு. ஆரம்பகாலங்களில் விஜய்யின் பல படங்களுக்கு சங்கீதா ஆடை வடிவமைப்பில் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத சங்கீதா, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையையும் குழந்தைகளையும் மிகச்சிறப்பாக கவனித்து வந்தார்.

விவாகரத்து மனுவில், “நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார். அதனை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். விஜய் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டது. 2021ம் ஆண்டு ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சங்கீதா தனது விவகாரத்து மனுவில், “நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.

இதையும் படிக்க :  மாம்பாக்கம் பகுதியில் சிறுவர் பூங்கா மதுராந்தகம் MLA மரகதம் குமரவேல் துவக்கிவைத்தார்

கடந்த 5 ஆண்டுகளாக மனதளவில் அவர் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானேன். அந்த உறவை முறித்துக்கொள்வதாக கூறினார். ஆனால் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லை. திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார். விஜய்யுடன் இருந்த புகைப்படங்களை நடிகை பகிர்ந்ததால் குடும்பத்திற்கு அவமானம்.

சம்பந்தப்பட்ட நடிகையோடு விஜய் வெளிநாடுகளுக்கு சென்றார். வெளிநாடுகளுக்கு சென்றதை நடிகையே பகிர்ந்தார். பொது வெளியில் நன்மதிப்பை கெடுக்கக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை. கணவரிடம் ஏதேனும் அழுத்தம் வந்தால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன். விஜய்யின் நடத்தை குழந்தைகளுக்கு அவமானம் ஏற்பட்டது. என்னை தொடர்ந்து அலட்சியப்படுத்தியதால் தனித்து வாழ்ந்து வருகிறேன்” என்றும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதற்கிடையே கடந்த பிப். 24ம் தேதி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த இந்த விவாகரத்து மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு!
Next Article தமிழ்நாட்டில் 14 வனப்பகுதிகளை ஆக்கிரமித்திருந்த அந்நிய மரங்கள் 100% அகற்றம் – மாநில அரசு தகவல்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,613 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,994 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.