தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவகாரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சங்கீதா ஒரு லண்டன் வாழ் தமிழ் பெண்மணி. இலங்கையை பூர்வீமாக கொண்ட இவர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து, பின்னாளில் அவருடைய வாழ்க்கைத்துணையாக மாறியவர். இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை ஒரு சினிமா கதை போலவே சுவாரசியமானது.
சங்கீதா லண்டனில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய தந்தை சொர்ணலிங்கம் லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபர். 1996-ம் ஆண்டு ‘பூவே உனக்காக’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நேரம். அப்போது விஜய்யைப் பாராட்டுவதற்காக லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார் சங்கீதா. படப்பிடிப்பு தளத்தில் விஜய்யைச் சந்தித்த சங்கீதா, தன்னை ஒரு ரசிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
சங்கீதாவின் குணாதிசயங்கள் விஜய்யின் பெற்றோருக்குப் பிடித்துப் போகவே, இருவீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட் 25, 1999 அன்று இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் சஞ்சய், கனடாவில் திரைப்படத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதேபோல் பெண் குழந்தையான திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார்.
விஜய் ஒரு சூப்பர் ஸ்டாராக வளர்ந்ததில் சங்கீதாவிற்கு முக்கிய பங்கு உண்டு. ஆரம்பகாலங்களில் விஜய்யின் பல படங்களுக்கு சங்கீதா ஆடை வடிவமைப்பில் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத சங்கீதா, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையையும் குழந்தைகளையும் மிகச்சிறப்பாக கவனித்து வந்தார்.
கடந்த சில காலங்களாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் தென்படாததால் சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவின. இருப்பினும், அவர் தனது குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக அங்கேயே தங்கியிருப்பதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தான் விவாகரத்து தாக்கல் செய்துள்ளார்.
விவாகரத்து மனுவில், “நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தார். அதனை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

