போஸ்டர் வெளியீடு
வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல போன்ற படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சுசீந்திரன். இவர் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ‘வள்ளி மயில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், ‘வள்ளி மயில்’ படத்தின் போஸ்டரை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— vijayantony (@vijayantony) October 4, 2022
