ட்ரெண்டாகும் பதிவு
அஜித் நடித்து கடந்த 11-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வரும் திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தை எச்.வினோத் இயக்க, மஞ்சுவாரியர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் வியாபார ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், ‘துணிவு’ படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வளையதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘துணிவு’ படம் பிளாக் பஸ்டர். எச்.வினோத் அவர்களுக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ என குறிப்பிட்டுள்ளார்.