சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது பாடல்
இயக்குனர் கவுதம் மேனன், நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இவர்களின் கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்கள் மிக பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here it is, The Soulful song #MarakkumaNenjam from @SilambarasanTR_ – @menongautham‘s #VendhuThanindhathuKaadu in @arrahman Musical ❤️ : https://t.co/YiIC3XoMnX
Prod by @VelsFilmIntl @IshariKGanesh
A @RedGiantMovies_ Release @Udhaystalin @MShenbagamoort3 #VTKFromSep15 pic.twitter.com/u96Iz9Fply— Silambarasan TR (@SilambarasanTR_) August 14, 2022

