அரசியல்தமிழ்நாடு

சாலை மறியல் செய்த விடுதலை சிறுத்தை கட்சினர் – என்ன காரணமா இருக்கும் ?

வேலூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விடுதலை சிறுத்தை கட்சி

அம்பேத்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோரை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன்சம்பத் இழிவுபடுத்தி பேசி வருவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் ராஜா தியேட்டர் அருகே கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் இளங்கோ, பொருளாளர் சஜின்குமார், தொகுதி செயலாளர்கள் கோட்டி என்ற கோவிந்தன், வையாபுரி, விமல் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் அங்கு திரண்டனர். அவர்கள் திடீரென அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் அர்ஜூன்சம்பத்தை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 50 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts