வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் சிவகங்கை, தஞ்சாவூர், அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் மழை
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. அதன்படி இன்று அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திருவாரூர், சேலம், தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாதப்பட்டினம், திருவாரூர்,
மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அரியலூர் மாவட்டத்தில் கடந்த வாரத்திலிருந்து பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்துமானாவாரி பயிர்களான நெல், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், பருத்தி, வேர்க்கடலை, சோளம் ஆகியவற்றை விதைப்பதற்கான பணிகள் தொடங்கின. அதேபோல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

